இன்று காலை கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளனர்.
கரூரில் ஜவகர் பஜார், தான்தோன்றி மலை, லைட் ஹவுஸ் கார்னர், கருப்புக்கவுண்டன் புதூர் பகுதிகளில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. மேலும் கரூர் நகர பகுதியில் உள்ள உணவகத்தில் உள்ள கண்ணாடிகள் உடைந்து விழுந்தது.
நில நடுக்கம் காரணமாக மிகவும் பீதி அடைந்த மக்கள் அலறடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
கரூரில் மட்டுமில்லாமல் அருகே உள்ள மாவட்டமான நாமக்கல் மாவட்டத்திலும் திடீரென பலத்த சத்தத்துடன் கட்டிடங்கள் குளிங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாகவும், இதனால் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடிச் சென்றுவிட்டதாகவும் அச்சத்தோடு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷியாவில் 7.6 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தமிழகத்தின் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும் அடுத்தடுத்து நிலஅதிர்வு ஏற்பட்டதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.