விஜய் சொன்னபடி அரசியலுக்கு வந்துவிட்டார். ஆனால், இது அவரது கடைசி படமா என்பதுதான் தெரியவில்லை; இவர்கள் சொல்வதையெல்லாம் தண்ணீரில்தான் எழுத வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது :
விஜய் சொன்னபடி அரசியலுக்கு வந்துவிட்டார். ஆனால், இது அவரது கடைசி படமா என்பதுதான் தெரியவில்லை; இவர்கள் சொல்வதையெல்லாம் தண்ணீரில்தான் எழுத வேண்டும் .
மாநாட்டை விஜய் சிறப்பாக நடத்திவிடுவார்; சினிமாத்துறையினருக்கு கூட்டம் கூடிவிடும். மக்கள் சினிமாவுக்கு வருவதுபோல் வந்துவிடுவார்கள்.
Also Read : சத்தமின்றி நடைபெற்ற Thalapathy69 படத்தின் பூஜை..!!
ஒரு குட்டி திராவிட கட்சியைப் போலத்தான் விஜய்யின் கட்சியும் இருக்கிறது திமுக எதை செய்கிறதோ அதேபோலத்தான் தம்பி விஜய்யின் கட்சியும் செய்கிறது; விஜய் கட்சி இரட்டை வேடம் போடுகிறது.
நான் திருமாவளவன் நாகரீகமான தலைவர் என்று நினைத்திருந்தேன் ஆனால் அந்த மேடையில் அவர் பேசியதை பார்த்ததும் அவர் மீது வைத்திருந்த மரியாதை சுக்குநூறாக உடைந்துவிட்டது.
அண்ணன் திருமா இந்த மாதிரி தரம் தாழ்ந்து பேசுவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை.. என்னுடைய 25 வருட அரசியல் வாழ்க்கையில் இப்படி ஒருத்தரை பார்த்ததே இல்லை.
மேடையில் திருமாவின் இமேஜ் டேமேஜ் ஆகி விட்டது இது வக்கிரத்தின் அடையாளம் திருமா ஒரு நாகரீகமான தலைவர் இல்லை என நிரூபித்து விட்டார் தனது துவேஷத்தை மிக கடுமையாக கக்கி இருக்கிறார் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.