மதக்கலவரத்தை தூண்டும் இஸ்லாமிய அமைப்புகளை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்- இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் நேற்று ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிர்வாகி கிருஷ்ணன் வீட்டில் மர்ம நபர்கள் இருவர் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர்.இந்த சம்பவம் மதுரையில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இந்த சம்பவம் குறித்து மதுரை மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் அவர்களிடம் புகார் மனு அளித்தார் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு அதை என் ஐ ஏ அமைப்பினர் சோதனை செய்கிறார்கள்.அதற்கு இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது தவறு இல்லை.ஆனால் பயங்கரவாத இஸ்லாமியர்கள் சிலர் தமிழகத்தில் கிட்டத்தட்ட 22 இடங்களில் ஒரே மாதிரியான பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார்கள்.
இது திட்டமிட்ட சதி. குறிப்பாக பிஜேபி ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி வீடுகள் தொழிற்சாலைகளில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரையில் கூட பெட்ரோல் கொண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது குறித்து கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளோம்.மதுரை போலீஸ் கமிஷனர் உடனடியாக குற்றவாளியை கண்டுபிடிப்போம் என கூறியுள்ளார். அது எங்களுக்கு திருப்தி அளிக்கிறது ஆனால் சொல்வது மட்டுமல்லாமல் செய்ய வேண்டும். இந்த பயங்கரவாதிகளை காவல்துறை கைது செய்யாமல் இருப்பது ஊக்கத்தை கொடுக்கும்.
தமிழகத்தில் அரசாங்கமும் உளவுத்துறையில் சரியில்லை. பயங்கரவாத இஸ்லாமியர்கள் தமிழகத்தில் பல கலவரங்களுக்கு திட்டமிட்டுள்ளார்கள்.
அவர்களைகாவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். 22 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றும்இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
கோயம்புத்தூரில் ஒரு ரகசிய அமைப்பை இஸ்லாமியர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். பயங்கரவாத முஸ்லிம்கள் பல இடங்களில் இருக்கிறார்கள்.
காவல்துறையினர் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று பேசினார்
மேலும்,மதுரையில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை கண்டித்து கோயம்புத்தூர் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்று இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசினார்.