ஆதித்யா L1 விண்கலம் ஏவப்பட்ட நாளன்று தனக்கு புற்று நோய் உறுதி செய்யப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விண்வெளி மைய ஆராய்ச்சி தலைவராக கேரளாவை சேர்ந்த எஸ் .சோம்நாத் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இஸ்ரோ தலைவராக செய்யப்பட்டு வருகிறார்.
இதனை தொடர்ந்து இந்திய விண்வெளி மைய ஆராய்ச்சி நிறுவனம் சோம்நாத் தலைமையில்,பல்வேறு வைகையான விண்வெளி பயணங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
அதில் ,சந்திராயன் 3 மற்றும் ஆதித்தியாL1 திட்டங்கள் முக்கியமானவை.மேலும் சந்திரயான்-3 விண்கலம் கடந்த 2023ஆம் ஆண்டு மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 23 ஆம் தேதி (23.08.23) சரியாக மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது.
மேலும் அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்த சாதனையை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவாகி உள்ளது.
இதனையடுத்து சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும்அதிநவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த 2023 ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தியது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் ,ஆதித்தியா L1 விண்கலம் ஏவப்பட்ட நாளன்று தனக்கு புற்று நோய் உறுதி செய்யப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: BREAKING : நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திராயன்-3!!
அப்போது பேசிய அவர்,ஆதித்தியா L1 விண்கலம் ஏவப்பட்ட போது தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும்,அப்போது மருத்துவரை சந்தித்து சிகிச்சை மேற்கொண்ட பொது தனக்கு புற்றுநோய் இருப்பது உறுத்தி செய்யப்பட்டது.
இதனால் நானும் எனது குடும்பமும் அதிர்ச்சி அடைந்தோம் . பின்னர் சென்னை சென்று பரிசோதனை மேற்கொண்டோம் . அதன் மூலம் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. மேலும் கீமோதெரபி சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது.
அடுத்த 4 நாட்கள் சிகிச்சை எடுத்து கொண்டு 5 வது நாள் ஆதித்தியா L1 பணிகளில்ஈடுப்பட தொடங்கினேன். மேலும் தனக்கு வழியேதும் இல்லையெனவும் புற்றுநோய் மீதான அச்சம் நிக்கி இயல்பாக செயல்படுவதாக தெரிவித்தார்.