இஸ்ரோ விஞ்ஞானி (scientist) ஒருவர் ரகசியங்களை வெளியிட மறுத்ததால் தன்னை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க சதி செய்கின்றனர் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரவின் மவுரியா என்பவர் மனிதனை விண்ணிற்கு அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான கங்கன்யான் திட்டத்தின் வெற்றிக்கான பணிகளில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ராக்கெட் விஞ்ஞானியாக (scientist) பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பிரவின் மவுரியா சமீபத்தில் தனது டுவிட்டர் பதிவில் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கங்கன்யான் திட்டம் குறித்தான ரகசிய தகவல்களை கேட்டு துபாய் நாட்டை சேர்ந்த சிலர் பிரவின் மவுரியாவை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.
மேலும், கங்கன்யான் திட்டம் குறித்தான ரகசிய தகவல்களை கூறினால் கோடிக்கணக்கில் பணம் தருவதாகவும் கூறியுள்ளார்கள்.
இதனையடுத்து, பிரவின் மவுரியா இதுதொடர்பாக இஸ்ரோ தலைவருக்கு நவம்பர் 5-ந் தேதி தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் கேரள போலீசார் பிரவின் மவுரியாவை கஞ்சா கடத்தியதாக கூறி தொந்தரவு செய்திருக்கிறார்கள்.
மேலும், ரகசியங்களை வெளியிட மறுத்ததால் பிரவின் மவுரியாவை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க சதி நடக்கிறது. எனவே, துபாய் உளவாளிகளுக்கும், கேரள போலீசாருக்கும் தொடர்பு இருப்பதாக கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் கேரள காவல் துறையின் உயர் அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டு உள்ளார். அதேபோல் முன்னாள் இஸ்ரோ தலைவரின் உறவினர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கிறது.
எனவே, இதுதொடர்பாக உளவுத்துறை விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்றும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
They alleged, I was selling weed (Ganja). How on earth a rocket scientist starts selling drugs to unknown minor girl at night 10:30 pm. I am there in Kerala for the last 12 years. Kerala police couldn't find any evidence of drugs with me. Need Justice!
— Praveen Maurya (@praveen_isro) November 11, 2022