சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் ஒன் விண்கலம் தனது முதலாவது ஒளிவட்ட சுற்றுப்பாதை பயணத்தை நிறைவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் பெருமைமிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பின் தனது அடுத்த இலக்கான சூரியனை ஆய்வு செய்ய ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது .
சூரியனின் சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ள இந்த விண்கலம் , அங்கு சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், உள்ளிட்ட பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இஸ்ரோவின் தொடர் கண்காணிப்பில் இருக்கும் ஆதித்யா எல்.1 விண்கலம் விண்கலம் 178 நாட்கள் பயணம் செய்து தனது முதலாவது ஒளிவட்ட சுற்றுப்பாதை பயணத்தை நேற்று நிறைவு செய்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர் .