அயோத்தி ராமர்கோவில் (ayodhya) கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு வழங்கப்பட்ட நிலையில், அயோத்திக்கு அத்வானி செல்வார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் பணிகள் முடிவடைந்த நிலையில், வருகின்ற 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை, ஆர்எஸ்எஸ் அமைப்பினா் உள்ளிட்டோர் செய்து வருகின்றனா். ஜன.22 அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை காண்பதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து இந்து மக்களும் தயாராகி வருகின்றனர். அன்றைய தினம் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் ஜன.,22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் பல்வேறு பிரமுகா்களும் அரசியல் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனா்.
இந்தநிலையில், பாஜக மூத்த தலைவர் அத்வானி இல்லம் சென்ற விஷ்வ ஹிந்துபரிஷத் அமைப்பின் அலோக் குமார், ஆர்.எஸ். எஸ். அமைப்பின் கிருஷ்ண கோபால், மற்றும் ராம்லால் ஆகியோர் விழா அழைப்பிதழை அத்வானியிடம் வழங்கினர்.
விழாவில் அத்வானி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அயோத்தி (ayodhya) ராமர்கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அத்வானி செல்வார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமர் ரத யாத்திரை மற்றும் ராம ஜென்மபூமி இயக்கங்களுக்கு அத்வானி மிக முக்கிய பங்குவகித்தார்.
இதையும் படிங்க : https://itamiltv.com/madurai-jallikattu-bookings-open-for-players-a
1990 செப்டம்பர் முதல் அக்டோபர் வரை தடைகளை எதிர்கொண்டு, ஏராளமான மக்கள் மத்தியில் உரையாற்றி ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என வாதிட்டவர் அத்வானி என்பர் குறிப்பிடத்தக்கது.
இதே போல் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
https://x.com/ITamilTVNews/status/1745321316289524197?s=20
இருப்பினும், அவர் விழாவில் பங்கேற்பாரா என்பது குறித்து தகுந்த நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று அக்கட்சி கூறியுள்ளது.
அதே போல் நடிகர் தனுஷ், ரஜினிகாந்த், உள்ளிட்ட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதல் வழங்கப்பட்டு வருகிறது.