மதுரை மாவட்டத்தில்( madurai) நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் பிரதானமானது ஜல்லிக்கட்டு போட்டி. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ‘ஏறு தழுவல்’ என்றும் அழைப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் தைப்பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டி தான்.
அந்த அளவுக்கு ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழர்களில் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ள விளையாட்டாகும். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் தைத்திங்கள் முதல் நாள் தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, மதுரையின் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு போன்ற பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.
இதையும் படியுங்க : https://itamiltv.com/trb-released-tentative-annual-planner-for-2024-sgt-professor-tet-and-7-jobs-listed/
2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்றது.
தச்சங்குறிச்சியில் உள்ள விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு விழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த நிலையில் மதுரை ( madurai) மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள், காளைகள் முன்பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்தார்.
madurai.nic.in என்ற இணையத்தளத்தில் காளை உரிமையாளருக்கும், மாடு பிடி வீரர்களுக்குகென தனித்தனியாக உள்ள பிரிவுகளில் ஜன.10-ம் தேதி முதல் ஜன.11-ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம்.
அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகள், மாடுபிடி வீரர்கள் இன்று பிற்பகல் 12 மணி முதல் முன்பதிவு செய்வதற்கான தளம் செயலில் உள்ளது.
https://x.com/ITamilTVNews/status/1744610989839184136?s=20
முறைகேடுகளை தடுக்க QR code இணைப்புடன் டோக்கன் வழங்கப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, ஆன்லைன் மூலமே டோக்கன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முன்பதிவு செய்தவுடன் அதற்கான ஒப்புகைச்சீட்டை பெற்றுக்கொள்ளப்பட்டு, ஆவணங்கள் சரி பார்க்கப்பட்ட பின்னர் தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு மட்டுமே டோக்கன் தரவிறக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.