Modi coming April9 tamilnadu : சென்ற மாதம் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளா் பட்டியலின் அடிப்படையில், தமிழகத்தில் மக்களவைத் தோ்தலில் மொத்தம் 950 போ் போட்டியிடுகின்றனா்;
அவா்களில் 874 போ் ஆண்கள். 76 போ் பெண்கள். அதிகபட்சமாக கரூா் மக்களவைத் தொகுதியில் 54 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா்.
அதற்கடுத்து, தென் சென்னையில் 41 பேரும், நாமக்கல்லில் 40 பேரும் போட்டியிடுகின்றனா். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளா்களும், காஞ்சிபுரத்தில் 11 பேரும், தஞ்சாவூரில் 12 வேட்பாளா்களும் களம் காணவுள்ளனா்.
இதையும் படிங்க : விடை பெறுகிறார் மன்மோகன்..! – ஸ்டாலின் வாழ்த்து!
இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலினும்,, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பியும் பிரசாரம் செய்து வருகிறார். அதே போல் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார்.
அதே போல, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய தலைவர்களின் பார்வையும் தற்போது தமிழ்நாடு பக்கம் திரும்பியுள்ளது. அதாவது தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரதமர் மோடி 5 தடவை தமிழ்நாட்டிற்கு வந்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அதாவது கோவை, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பொதுக்கூட்டங்களிலும் பேசினார். கோவையில் ரோடு ஷோவிலும் பங்கேற்றார்.
இந்நிலையில் தான், தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் 9ம் தேதியன்று பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது Modi coming April9 tamilnadu.
இது குறித்து சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயம் தரப்பு கூறும் போது, “ பிரதமர் மோடி தலைமையில் சென்னையின் 3 வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது.
தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னை பாண்டி பஜார் பகுதியில் பிரதமர் வாகன பேரணியிலும் பங்கேற்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 5ம் தேதி தமிழ்நாடு வருகிறார்” என கூறினர்.
மீண்டும் மோடியின் வருகையால் உற்சாகத்தில் உள்ளனர் பாஜகவினர்.
இதையும் படிங்க : 5 ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை