இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் நேற்று காலை உத்தரகாண்டில் இருந்து டெல்லி நோக்கி தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் சென்றுகொண்டிருந்தார்.
ரிஷப் (rishabh)பந்த் கார் விபத்து:
அப்போது, அவரின் கார் ஹரிதுவார் ரூர்க்கி நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்த போது, சாலை டிவைடரில் பலமாக மோதியது.இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ரிஷப் பண்டை, மீட்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் ரிஷப் பந்திற்கு தலை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் , அவருக்கு தற்போது முதற்கட்ட சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது
விபத்தாகிய கார் தீப்பிடித்து எரிந்ததில் கார் மொத்தமாக சேதமடைந்தது.
ரிஷப் பண்டிற்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். இவருக்கு தலையில் மோசமான காயம் ஏற்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
இந்திய அணியின் குறிப்பாக டெஸ்ட் அரங்கில் மிக முக்கிய வீரராக திகழும் ரிஷப் பண்ட்( rishabh) விபத்தில் சிக்கியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள், பிரபலங்கள் பலர் இவர் உடல்நிலை தேறி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Distressed by the accident of noted cricketer Rishabh Pant. I pray for his good health and well-being. @RishabhPant17
— Narendra Modi (@narendramodi) December 30, 2022
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்:
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் (rishabh) விபத்தில் சிக்கியதை அறிந்து கவலையடைந்தேன். அவரது நலனுக்காகவும், நல்ல ஆரோக்கியத்திற்காகவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.