ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்புகள் குறித்து போலீசாரின் விசாரணை எப்படி உள்ளது என்பதை கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என சென்னை உயர்நீதி மன்றம் காரசார உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொலை கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது இதனால் பொதுமக்கள் மற்றும் தொழிசெய்வோர் மரண பயத்துடன் பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
Also Read : கோத்தகிரி அருகே அரசு பேருந்து மீது உரசிய மின்கம்பி – பரிதாபமாக உயிரிழந்த ஓட்டுநர்..!!
இந்நிலையில் ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்போடு தொடர்புடைய கொலை மற்றும் வன்முறை சம்பவங்களை போலீசார் எப்படி விசாரிக்கின்றனர்?- என்பதை கண்காணிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
நில அபகரிப்பு வழக்குகளில் வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க முடியாது என்பதை விசாரணை அமைப்புகள் வெளிப்படுத்தி வருவது வேதனை தருவதாக என உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நில அபகரிப்பு தொடர்பாக கார்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றிய நீதிபதி, சிறப்புக் குழுவை அமைத்து 4 மாதங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.