drug dealer : போதை பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் திரைப்பட தயாரிப்பாளரும் திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த இரு தினங்களுக்கு முன் 50 கிலோ எடையுள்ள சூடோபெட்ரைன் என்ற போதை பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/image-50.png?resize=1024%2C576&ssl=1)
இந்த கடத்தல் சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் என தகவல் வெளியானது.
Also Read : https://itamiltv.com/pm-modi-coming-to-tn-5-layers-of-security-in-chennai/
இதையடுத்து தி.மு.க.வில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார். தற்போது ஜாபர் சாதிக் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் உள்பட வழக்கில் தொடர்புடையதாக மேலும் சிலரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/image-49.png?resize=480%2C270&ssl=1)
இந்நிலையில் ஜாபர் சாதிக்கின் வங்கி கணக்குகளை (drug dealer) முடக்கி உள்ள போலீசார் அவரை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.