ஜெய் ஸ்ரீராம் (jai sri ram) என்ற வார்த்தையை வெற்றி உணர்வாக பார்க்கிறேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசைசௌந்தரராஜன் கருத்து தெரிவித்தார்.
புதுச்சேரியில் இண்டஸ் இண்ட் வங்கியின் புதுச்சேரி கிளைத் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி கிளையை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் வங்கியின் தெற்குப்பகுதி மண்டலத் தலைவர் திரு.R.கணேசன்,விளம்பரப் பிரிவு தலைவர் திரு.விஜய் பிராங்கிளின் மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை..
புதுச்சேரியில் எப்போதும் புதிதாக கிளைகள் திறந்தாலும் அவர்களுக்கு புதுச்சேரி மக்கள் உறுதுணையாக இருப்பார்கள். வங்கி கிளைகளை திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய சூழலில் கடன் உதவி வழங்குவது சாதாரண காரியம் அல்ல. முன்பு இத்தகைய செயல்கள் செய்வது சிரமமாக இருந்தது. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலின்படி வருமான வரி கட்டுதல் ஊக்கப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.
இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் வீரரை நோக்கி எழுப்பபப்பட்ட ஜெய்ஸ்ரீராம் கோஷம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு,”நம் நாட்டின் முயற்சியில் விண்கலம் மேலே எழும்போது ‘வந்தே மாதரம்’ என கோஷம் எழுப்பியதாக அப்துல் கலாம் தன் சுய சரிதையில் எழுதி உள்ளார். அப்படித்தான் வெற்றி என்று வரும் போது உள் உணர்வோடு கிரிக்கெட் ரசிகர்கள் கோஷம் எழுப்பினர்.
ஜெய் ஸ்ரீராம்” என்பது நாட்டின் வெற்றியைக் குறிக்க வேண்டும் என அவர்கள் நினைத்துள்ளனர். அதில் மதம் இருந்ததாக நான் பார்க்கவில்லை. அதில் வெற்றி உணர்வு இருந்ததாகத்தான் பார்க்கிறேன். நாடு வெற்றி பெற்றது என்பது தொடர்பாக சொல்லக் கூடிய வார்த்தையாகத்தான் பார்க்கிறேன். எனவே, ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தையை மதம் சார்ந்தாக பார்க்கவில்லை, வெற்றி உணர்வு சார்ந்ததாகத்தான் நான் பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.