சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் வர்மா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கிய பிரபல கேரள நடிகர் விநாயகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள திரையுலகில் பல பன்முக கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி இடம் பிடித்தவர் விநாயகன்.கேரள மொழி படங்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு,ஹிந்தி உள்பட வேற்று மொழிப்படங்களில் விநாயகன் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஜெயிலர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவான இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கே வில்லனாக நடித்து தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்றுள்ளார்.
அடுத்தடுத்து பல மாஸ் படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர் தற்போது கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதால் மலையாள நடிகர் விநாயகன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் . அவர் மது அருந்தி இருந்தாரா என்பதை அறிய மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.