பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ள நிலையில் தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகை 4 நாட்கள் வரை கொண்டாடப்படும் இப்பண்டிகையை முக்கியமாக தமிழக விவசாயிகள் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
கிராமங்களில் இப்பண்டிகை பல்வேறு விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்படுவதை பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
அந்தவகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் . அதேபோல் இந்த வருடமும் இப்போட்டி கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன:
ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளை துன்புறுத்தக் கூடாது.
Also Read : தங்கத்தாலான ஓலா S1 Pro ஸ்கூட்டர் அறிமுகம்..!!
மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட www.jallikattu.tn.gov.in தளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசின் முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.