கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு (Jallikattu) அரங்கத்தை” வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் கீழக்கரைக்கு வருகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.
இன்று மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு (Jallikattu) நிறைவு பெற்ற நிலையில், 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கருப்பாயூரணி கார்த்தி என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
கடந்தாண்டு முதலிடம் பிடித்த பூவந்தி அபிசித்தர், 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடமும், குன்னத்தூர் திவாகரன் 12 காளைகளை அடக்கி மூன்றாம் இடமும் பிடித்தனர்.
இந்த நிலையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை” திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, வருகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள X பதிவில்
ஜல்லிக்கட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர்.
இதையும் படியுங்க : https://itamiltv.com/chicken-biryani-if-you-give-10-rupees-coin/
புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். வெற்றி பெற்ற காளைகளும் – வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை” வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் – கீழக்கரைக்கு வருகிறேன்.
தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்! எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம்! என தெரவித்துள்ளார்.
https://x.com/ITamilTVNews/status/1747593282081915018?s=20
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் 65 ஏக்கரில் 44 கோடி மதிப்பீட்டில் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது