நாட்டுக்காக எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் (soldiers), கமாண்டோ வீராங்கனைகள் பட்டாசு கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்தியா- பாகிஸ்தான் எல்லையான லைன் ஆப் ஆக்சுவல் கன்ட்ரோல் பகுதியில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் 10,000 அடி உயரத்தில் உள்ள இந்தியாவின் கடைசி ராணுவச் சாவடியில் தீபாவளியைக் கொண்டாடி வருகிறார்கள்.
தீபாவளியை முன்னிட்டு அனைத்து இந்தியர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்.
இந்திய ராணுவம் பூஞ்ச் எல்லையில் உள்ள கடைசி போஸ்டில் தீபாவளி கொண்டாட்டத்தோடு நாட்டை பாதுகாத்து வருகிறோம் என்று இந்திய ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியில் ராணுவ வீரர்கள் (soldiers) ஒருவருக்கு ஒருவர் தீபாவளி வாழ்த்துக் கூறிக் கொண்டு தீபாவளியை மத்தாப்பூ கொளுத்தி கொண்டாடினர்.
எல்லைக்கு அருகே பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பெண் கமாண்டோக்களும் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியுடன் தீபாவளிக் கொண்டாட்டத்தைத் தொடங்கினர்
ராணுவத்தினர் தங்கள் குடும்பத்தினர் அனுப்பிவைத்த இனிப்புகளையும் பகிர்ந்து பரிமாறிக் கொண்டனர்.
அதேபோல், ஜம்மு-காஷ்மீர் அங்குர் செக்டார் பகுதியில், ராணுவ வீரர்கள் அகல் விளக்கேற்றியும், பட்டாசு வெடித்தும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.