அந்தமான் தீவுகளில் வசிக்கும் ஜாரவா பழங்குடியினர வெள்ளையாக பிறக்கும் குழந்தைக்கு மரண தண்டனை விதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தமான் தீவுகளில் வசிக்கும் ஒரு பழங்குடியினரான ஜாரவா மக்களுக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் பசிபிக் தீவை சேர்ந்தவர்கள் என்பதற்கான அம்சங்கள் உள்ளன. இந்த தீவுகள் இந்தியாவில் இருக்கும் போதிலும அவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்ல என சொல்லப்படுகிறது.
கடந்த 55 ஆயிரம் ஆண்டுகளாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் வாழ்ந்து வரும் இவர்கள் பழங்குடியினராகக் கருதப்படுகிறார்கள். இப்போது ஜாரவா பழங்குடியினமானது அழிவின் விளிம்பை எட்டியுள்ளது. தொன்மையான பழங்குடிகளாக கருதப்படும் ஜாரவா பழங்குடியினத்தில் இப்போது மொத்தமாகவே வெறும் 380 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.
இவர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று கூறப்பட்டாலும், அவர்கள் நீண்ட காலமாக இந்தியப் பெருங்கடல் தீவில் தான் வசித்து வருகின்றனர். வெளி உலக தொடர்பு துளியும் இன்றி தனிமையில் வாழும் ஜாரவா பழங்குடியினர் விலங்குகளையும் அந்தமான் கடலில் மீன்களையும் வேட்டையாடி உண்டு வாழ்கின்றனர்.
ஜாரவா பழங்குடியின மக்கள் தங்கள் வித்தியாசமான வாழ்க்கை முறையால் உலக மக்களிடம் இருந்து விடுபட்டுள்ளனர். இந்த பழங்குடியினரில் பல விசித்திரமான விஷயங்கள் மிகவும் பரவலாக உள்ளன. பிறக்கும் குழந்தைக்கு கூட மரண தண்டனை விதிப்பதுதான் இதில் அதிர்ச்சிகரமானது. ஜாரவா பழங்குடியினரில், ஒரு குழந்தை அழகாகவோ அல்லது வெள்ளை நிறமாகவோ பிறந்தால் அந்த குழந்தைகள் பிறந்த உடனேயே கொல்லப்படுவார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள் என்பதால் பழங்குடி மக்கள் கறுப்பாக இருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஒரு பெண்ணுக்கு வெள்ளையாக குழந்தை பிறந்தால், இந்த பழங்குடியினர் அந்த குழந்தையை ஏற்காமல் கொன்றுவிடுகிறார்கள். வெள்ளை நிறமான குழந்தை என்பது வேறு சில பழங்குடி அல்லது வேற்றுமையாக கருதுகிறார்கள். இதனால் தான் வெண்மை நிறத்திலான குழந்தையை கொன்று விடுகிறார்கள்.

அது போல் ஒரு பெண் கணவரை இழந்துவிட்டால் அவரது குழந்தையையும் கொல்லும் வழக்கம் இவர்கள் இனத்தில் உள்ளது. இவர்களை சுற்றுலா பயணிகள் நேரில் போய் பார்ப்பதற்கும் புகைப்படம் எடுத்து வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம் என்று கூறப்படுகிறது
இது தவிர, இந்தச் சமூகத்தில் ஒரு குழந்தை பிறக்கும் போதெல்லாம், குலப் பெண்கள் அனைவரும் தாய்ப்பால் கொடுப்பார்கள். இது ஒற்றுமையின் ஆணிவேராகக் கருதப்படுகிறது.