அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த செப் 7 ஆம் தேதி கோலாகலமாக வெளியானது ஜவான் படம். ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தி திரையுலக வரலாற்றில் முதல் நாள் வசூலில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய தொடக்க நாள் வசூல் சாதனையை பதிவு செய்தது ஜவான். மூன்று நாட்கள் முடிவில் சுமார் 384.69 கோடி வசூலித்து இருப்பதாக அறிவிக்கப்பட்டது. நான்கு நாட்களில் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அதனைத் தொடர்ந்து 20ஆவது நாளில் 1000 கோடி வசூலை தாண்டியது.
இந்நிலையில் தற்போது, உலகம் முழுவதும் 30வது நாளில் ரூ.1103.27 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஹிந்தி திரைப்படம் இவ்வளவு வசூலித்துள்ளதாக படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
ஆமீர்கானின் ‘தங்கல்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.2,024 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. இது பெரும்பாலும் (ரூ.1300 கோடி) சீனாவில் இருந்து வசூலித்து குறிப்பிடத்தக்கது. ஷாருக்கானின் முந்தையப் படமான பதான் ரூ.1050.30 கோடி வசூலித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.