பாஜக-வுக்கு இனிமேல் கெட்டகாலம் தான் என அமிதாப் பச்சன் மனைவியும், ராஜ்யசபா எம்பியுமான ஜெயா பச்சன் மாநிலங்களவையில் சாபம் விட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கையில் இருந்த புவனேஸ்வர் கலிடாவும் சபையின் மையப்பகுதியில் அமளியில் ஈடுபட்டவர்தான் என்று சமாஜ்வாடி உறுப்பினர் நடிகை ஜெயா பச்சன் கூறியுள்ளார்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று சமாஜ்வாடி உறுப்பினர் நடிகை ஜெயா பச்சன் பேசினார். 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் பற்றி பேசிய அவர், அப்போது சபாநாயகர் இருக்கையில் இருந்த புவனேஸ்வர் கலிடாவும் சபையின் மையப்பகுதியில் அமளியில் ஈடுபட்டவர்தான் என்று கூறினார்.
அதற்கு பா.ஜனதா உறுப்பினர் ராகேஷ் சின்கா எதிர்ப்பு தெரிவித்து . இருப்பினும், ஜெயா பச்சன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், தன்னை பற்றி சில உறுப்பினர்கள் தனிப்பட்ட கருத்துகளை தெரிவித்ததாக அவர் புகார் தெரிவித்தார்.
‘‘பா.ஜனதாவுக்கு இனிமேல் கெட்ட காலம்தான் வரும். நான் சாபம் விடுக்கிறேன்’’ என்று அவர் கூறினார். இதனால் ராஜ்யசபாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது