மர்மமாக உயிரிழந்த ஜெயக்குமார், தனது கடித்தில் 11 லட்சம் ரூபாய் தனக்கு தந்ததாக கூறுவது பொய் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.

திருநெல்வேலி கிழக்கி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த 2ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், 4ஆம் தேதி அருகே உள்ள தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மரண வாக்குமூலம் என்ற தலைப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அவரது மருமகன் ஆகியோருக்கு ஜெயக்குமார் எழுதிய 2 கடிதங்கள் வெளியானது.
இதையும் படிங்க: கட்டிலில் கட்டிவைத்து கணவனுக்கு கொடூரம்…. அடாவடி மனைவி கைது
இந்த கடித்தத்தில் 14 பேரின் பெயர் விவரங்களை குறிப்பிட்டு பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்து வந்ததாக கூறியிருந்தார்.
நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன், காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோரின் பெயரும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து கடிதத்தில் பெயர் இருந்தவர்கள் உள்பட 20 பேருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதில் சம்மன் அனுப்பப்பட்ட கே.வி.தங்கபாலு, நெல்லையில் தனியார் விடுதியில் தனிப்படை ஆய்வாளர் கண்ணன் நடத்திய விசாரணையில் ஆஜராஜனார்.
அப்போது தனது பதிலை எழுத்துப்பூர்வமாக தங்கபாலு எழுதி சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது;-
ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் அவர் எனக்கு பணம் கொடுத்தார் என்றும், அதனைத் திருப்பிக் கேட்டபோது சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனிடம் வாங்கிக் கொள்ளூமாறு சொன்னதாக அவர் எழுதியிருக்கிறார். அது முற்றிலும் பொய்யானது. உண்மைக்குப் புறம்பானது. நான் அவரிடம் பணம் வாங்கவேண்டிய அவசியமும் இல்லை. நெல்லை தொகுதி பண விவகாரங்களை நான் கவனிக்கவும் இல்லை. நான் பணம் வாங்கியதாகக் கூறியதை மறுக்கிறேன்.