jayalalithaa-தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1991 முதல் 96 ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இதனை தொடர்ந்து போயஸ் கார்டன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அசையும் சொத்துக்களான 800 கிலோ வெள்ளி,
28 கிலோ தங்கம், 750 சோடி காலணிகள், 10,500 புடவைகள், 91 கைக்கடிகாரங்கள் மற்றும் சில மதிப்பு மிக்க ஏராளமான பொருட்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
இவ்வழக்கு விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்றதால் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார். அதனைத் தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில்
சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
இதையும் படிங்க:http://Madhuranthakam lake-அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!
இதனையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து விடுதலையாகினர்.
இதனிடையே சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டுமெனவும்,
அதன்மூலம் வரும் பணத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டுமெனவும் பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அரசால் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களில் தனக்கு உரிமை உண்டு எனவும்,
அவற்றை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் மனுதாக்கல் செய்தார். இந்த நகைகள் அனைத்தும் தற்போது கர்நாடகா கருவூலத்தில் உள்ளன.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1749661322684633284?s=20
இந்த நிலையில் ஜெயலலிதாவின்(jayalalithaa) பொருட்கள் தொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மேலும் வழக்கை விசாரித்த நீதிபதி ஹெ.ஏ.மோகன், “நகைகளை ஏலம் விடுவதற்குப் பதிலாக, தமிழக அரசின் உள்துறை மூலமாக தமிழகத்துக்கு மாற்றுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.
ஆகவே, தமிழக அரசு செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியை நியமித்து அவர் மூலமாக போலீஸாருடன் இணைந்து நகைகளை பெற்றுக்கொள்ள வருமாறு உத்தரவிடுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேல்முறையீடு தீர்ப்பு:
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சசிகலா உட்பட 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தது.
செயலலிதா மறைந்ததை அடுத்து வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன், ஜெ. இளவரசி ஆகிய மூன்று பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும்,
ரூபாய் 10 கோடி அபராதமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.
அதன் படி, வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன் மற்றும் ஜெ. இளவரசி ஆகியோர் பரப்பன அக்ரகார மத்தியச் சிறையில் 15 பிப்ரவரி 2017 அன்று அடைக்கப்பட்டனர்.