மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா (Jayalalithaa’s jewellery) அவர்களின் பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
தமிழ் நாட்டில் இருக்கும் இரு பெரும் கட்சிகள் திமுக மற்றும் அதிமுக இதில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் அதிக தொண்டர்களுடன் வானுயர சென்ற கட்சி அதிமுக.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்கு பின் புரட்சி தலைவி என்று அக்கட்சியின் தொண்டர்களால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா அதிமுகாவை கம்பீரமாக வளர்த்து வந்தார்.
நடிப்பில் சிறந்து விளங்கிய இவர் எம்.ஜி.ஆரை போல் அரசியலிலும் நுச்சலான இரும்பு பெண்மணியாக கட்சியை வழிநடத்தி வந்தார்.
மக்களுக்காக நான் மக்களுக்காகவே நான் எனும் தாரக மந்திரத்தை கொண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பலமுறை ஆட்சி பொறுப்பில் இருந்துள்ளார்.
என்னதான் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரு பெண்ணாக அரசியலில் அவர் ஆற்றிய பங்கை யாராலும் வசைபாட முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.
இப்படி தமிழக ஆட்சி செய்து வந்த அவர் கடந்த 1991 – 96ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடத்திய சோதனையில் பல தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரத்தின கற்கள், உட்பட ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது .
இவ்வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்த போது, ஜெயலிதா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூரு மத்திய சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர்.
இந்நிலையில் சொத்து வழக்கில் ஜெயலலிதாவின் தண்டனை காலம் முடிந்த நிலையில் அவரது நகைகளை ஏலம் விடுமாறு சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
மார்ச் 6, 7ஆம் தேதிகளில் தமிழ்நாடு உள்துறைச் செயலர் நேரில் ஆஜராகி ஜெயலலிதாவின் நகைகளை பெற்றுக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read : https://itamiltv.com/govt-servant-commits-suicide-due-to-usury/
மேலும் வழக்கு கட்டணமாக ₹5 கோடியை கர்நாடகாவுக்கு வழங்குமாறும் தமிழ்நாடு அரசுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீண்ட காலமாக கர்நாடகாவில் இருந்த (Jayalalithaa’s jewellery) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள் பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.