இடைக்கால ஜாமினில் வந்த கோவை நகைக்கடை அதிபர் பாலமுருகன் தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திசை திருப்ப False Complaint அளித்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை கிராஸ் கட் ரோடு மேம்பாலம் அருகில் கற்பகம் ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது .
இந்த நிறுவனத்தை ராமதாஸ் கடந்த 2006 ஆம் ஆண்டு துவக்கினார். கற்பகம் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தை ராமதாஸின் மகன் பாலமுருகன் கவனித்து வந்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ராமதாஸ் பரிதாபமாக இறந்தார். அவரது இறப்பிற்கு பின் பாலமுருகன் சகோதரி கடையின் இருப்பு விபரங்களை சரிபார்த்த போது
பொய் கணக்கு மூலம் 7 கோடி ரூபாய் மதிப்பிலான 10கிலோ 476 கிராம் அளவுள்ள தங்க நகைகளும் 7 கோடி ரூபாய் முதலீட்டு பத்திரம் என 14 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை பாலமுருகன் அபகரித்துக் கொண்டது தெரிய வந்தது .
இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த பாலமுருகனின் சகோதரி கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார் .
புகாரின் பேரில் பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பாலமுருகன் துபாய்க்கு தப்பி சென்று விட்டார்.
இதேபோல கடந்த 2020 ஆம் ஆண்டு பாலமுருகனின் தந்தை ராமதாஸ் இறந்த பிறகு அவரது டிஜிட்டல் கையெழுத்துக்களை போலியான முறையில் பயன்படுத்தி ஜிஎஸ்டி வரி கணக்குகளை தாக்கல் செய்து.
மோசடி செய்ததாக கடந்த ஆண்டு மாநகர குற்றப்பிரிவு போலீசார் பாலமுருகன் மற்றும் அவரது ஆடிட்டர் உள்ளிட்டோர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து பாலமுருகன் வெளிநாட்டிற்கு தப்பி சென்ற சமயத்தில் முன்ஜாமின் கேட்டு சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் .வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகனுக்கு இடைக்கால ஜாமின் அளித்திருந்தார்.
பின்னர் இந்தியா திரும்பிய பாலமுருகன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் மீது ஏற்கனவே நடந்துக் கொண்டிருக்கும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல்
புதிதாக கோவை காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் தனது தங்கை கணவர் சிவக்குமார் மீது ஆவணங்கள் நகைகளை திருடி சென்று விட்டதாகவும் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில் சிவகுமார் ஆவணங்கள் மற்றும் நகைகளை திருடி சென்றது கடை ஊழியர் சதீஷ்க்கு தெரியும் என்றும் அவரை சிவக்குமார் உள்ளிட்டோர் மிரட்டினர் என்றும் குறிப்பிட்டிருந்தார் .
Also Read : https://itamiltv.com/information-released-about-alliance-pmk-refusal/
இதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் சதீஷ் கடந்த ஒரு வருட காலத்தில் பாலமுருகனை தான் சந்திக்கவில்லை என்றும் உண்மைகளை கூறியதால் அது
பாலமுருகனுக்கு எதிராக இருப்பதால் அப்படி தன்னை சம்பந்தப்படுத்தி புகார் அளித்திருப்பதாக கூறியுள்ளார்.
சதிஷ் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் பொய்யான தகவல்களை கொண்டு பாலமுருகன் புகார் அளித்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இடைக்கால ஜாமினில் வந்த நகைக்கடை அதிபர் பாலமுருகன் தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திசை திருப்ப False Complaint அளித்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.