தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதியுடன் நிறைவேறும், நிலையில் (Road Show) அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தரப்பில் அதன் மேலிட தலைவர்களும், தமிழகத்தில் சுற்றிச் சுழன்று பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் ரோடு ஷோவும் நடத்தியுள்ளனர். பிரதமர் மோடி தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் கோவை, சென்னை, திருநெல்வேலி பகுதியில் ரோடு ஷோவில் பங்கேற்றதோடு பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு வாக்கு சேகரித்து சென்றுள்ளார்.
Also Read : https://itamiltv.com/postal-voting-in-tamil-nadu-ends-today/
வானதி சீனிவாசனும் கோவை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இதே போல் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும், தமிழகத்தில் ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று (செவ்வாய்க்கிழமை) முசிறி பகுதியில், பெரம்பலூர் மக்களவை தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து ரோடு ஷோ நடத்துகிறார்.
இதற்காக கோவையில் இன்று இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு, திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு 3.40மணிக்கு வரும் ஜே.பி.நட்டா,அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக முசிறி அருகாமையில் உள்ள சிட்டிலரை பகுதிக்கு செல்கிறார்.
சிட்டிலரையில் இருந்து கார் மூலம் முசிறி சென்று அங்கு துறையூர் சாலை ரவுண்டானாவில் இருந்து பரிசல் துறை சாலை வரை ரோடு ஷோ நடத்துகிறார்.
பின்னர் ரோடு ஷோ நிறைவடைந்ததும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு (Road Show) வந்து 6 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஜே.பி.நட்டா வருகையை முன்னிட்டு திருச்சி மற்றும் முசிறியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.