காரைக்காலில் திருப்பட்டினம் ஆயிரம் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காரைக்காலில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் புதுச்சரியின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கபப்ட்டுள்ளதால் பொது மக்கள் கோடை விடுமுறையை கொண்டாட சுற்றுலாத் தளங்களுக்கு படை எடுத்துள்ளனர்.
அதே போல் தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த ஆலயங்களில், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட நாட்களை முன்னிட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருப்பட்டினம் ஆயிரம் காளியம்மன் கோவில் திருவிழா நாளை நடைப்பெற உள்ளதால் காரைக்காலில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே ஆயிரங்காளியம்மனை தரிசிக்க முடியும் என்பதால், பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வருவார்கள். இதனை முன்னிட்டு காரைக்காலில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.