2019 ஆம் ஆண்டு சந்திரயான்-2 விண்கலம் சந்திரயான்-2 விண்கலத்தில் ஏற்பட்ட சிறிய பிழையால் வெற்றிபெற முடியவில்லை என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தலத்தில்கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3, விண்ணில் ஏவப்பட்டது.கிட்டத்தட்ட 40 நாள் பயணத்திற்கு பிறகு நிலவின் தென் துருவத்தில் நேற்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. பிறகு திட்டமிட்டபடி விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவரும் நிலவில் கால் பதித்தது.
2019 ஆம் ஆண்டு சந்திரயான்-2 விண்கலத்தில் ஏற்பட்டது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கே.சிவன், “இந்த நிகழ்வு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வேண்டும். சந்திரயான்-2-ல் ஏற்பட்ட சிறிய பிழையால், எங்களால் வெற்றி பெற முடியவில்லை.
இல்லையெனில்,நான்கு வருடங்களுக்கு முன்பு இதையெல்லாம் சாதித்திருக்கலாம். ஆனால் இப்போது, நாங்கள் பிழையிலிருந்து கற்றுக்கொண்டு அதைத் திருத்தியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,2019 ஆம் ஆண்டிலேயே, நாங்கள் சந்திரயான் – 3 ஐ கட்டமைத்தோம் ஆனால் சந்திரயான் – 2 வை விண்ணில் செலுத்தினோம் ஆனால் அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது .மேலும் சந்திரயான் – 3ல் சந்திரயான் – 2 இருந்த பிழைகளை திருத்தங்கள் செய்யட்டது. அந்த முயற்சியின் பலனை நேற்று நாங்கள் கண்டோம்,” என்று அவர் கூறினார்.
மேலும் விண்வெளியில் 40 நாள் பயணத்திற்குப் பிறகு, சந்திரயான் -3 லேண்டர், `விக்ரம்’, புதன் மாலை, அடையாளம் காணப்படாத சந்திர தென் துருவத்தைத் தொட்ட முதல் நாடாக இந்தியாவை உருவாக்கியது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு சந்திரனில் தரையிறங்கும் பணியை வெற்றிகரமாக நடத்தியது அதன் பிறகு நான்காவது நாடாகவும் இந்தியா ஆனது.