‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலயா’ பாடலுக்கு (kaavaala song) ஆடிய நடிகை தமன்னாவின் நடன வீடியோ வைரலான நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது சிம்ரன்,ஹன்சிகா, நயன்தாரா, மாளவிகா, கத்ரீனா கைப், கெய்ரா அத்வானி, மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் காவாலயா பாடலுக்கு நடனம் ஆடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில், தற்போது அவருடைய இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகிய பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மேலும், இந்த படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார் என்றும், படத்தில் அதிரடி சண்டை காட்சிகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததுள்ள நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலயா’ பாடல் (kaavaala song) வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த பாடலை அனிருத் இசையமைப்பில் ஷில்பா ராவ் பாடியுள்ளார். தமன்னா மற்றும் ரஜினிகாந்த் இணைந்து ஆட்டம் போட்டிருந்த இந்தப் பாடல் சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினரையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில், செந்தில் நாயகம் என்ற செயற்கை நுண்ணறிவு என்ஜினியர் ஒருவர், காவாலயா பாடலுக்கு தமன்னா பாட்டியாவின் நடன வீடியோவைப் போல பல்வேறு நடிகைகளும் ஆடும்படி மாற்றி அமைத்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.
அதன்படி, அவருடைய டுவிட்டர் கணக்கில், சிம்ரன்,ஹன்சிகா, நயன்தாரா, மாளவிகா, கத்ரீனா கைப், கெய்ரா அத்வானி, மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் ஆடும்படியான வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.