உலககெங்கும் இருக்கும் சினிமா ரசிகர்கள் பேராவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ( kalki trailer ) கல்கி படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் , திஷா பதானி ஆகியோர் நடித்துள்ள “கல்கி 2898 கிபி” திரைப்படத்தின் ட்ரைலர் தான் தற்போது இணையத்தில் செம ட்ரெண்டாக வலம் வருகிறது.
தமிழ். கன்னடம்,மலையாளம்,ஹிந்தி, உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் இந்த படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார் . இப்படத்தின் ஒவ்வரு அப்டேட் வெளியாகும் போதும் படத்தின்மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரிக்கிறது.
Also Read : கஞ்சா வழக்கில் கைதான மனைவி – பாமக மாவட்ட நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்..!!
அந்தவகையில் நேற்று மாலை வெளியான இப்படத்தின் ட்ரைலர் இந்திய சினிமா ரசிகர்களை செம குஷியில் அளித்துள்ளது.
ட்ரைலரில் காட்சிக்கு காட்சி பிரம்மாண்டத்தை காட்டியுள்ள நிலையில் நிச்சயம் இது ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் 2024 ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் ( kalki trailer ) உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.