கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி 100க்கும் மேற்பட்டோர் குடித்துள்ளனர்.
கள்ளத்தனமாக விற்ற இந்த சாராயத்தை குடித்த சில நிமிடங்களில் குடிமகன்களுக்கு வாந்தி கண் எரிச்சல் தலை சுற்றல் உள்ளிய உபாதைகள் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர் .
ஒரு பக்கம் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்க மறுபக்கம் ஒவ்வருவராக உயிரிழக்க ஆரம்பித்தனர் .
மருத்துவர்கள் எவ்ளோவோ காப்பாற்ற போராடினாலும் இன்று வரை உயிரிழப்புகள் அதிகரித்து தான் வருகிறது .
Also Read : ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை உயர்வு..!!
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சம்பவத்தில் 6 பெண்கள் உள்பட 65 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்ட போதிலும் கள்ள சாராயத்தை ஒடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர் .
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ஏராளமான கள்ளச்சாராய பேரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு போலீசாரால் அழிக்கப்பட்டுள்ளது.