நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் விக்ரம் திரைப்படம் வெளியானது.இந்த திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசனின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்து அப்டேட்டுகளை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் உலக நாயகன் என்றும் ஒட்டுமொத்த ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்.
நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜன் இயக்கத்தில் சமீபத்தில் விக்ரம் திரைப்படம் வெளியானது.இந்த திரைப்படம் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்தது.இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படம் 2023 ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனை அடுத்து நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படமும் 2023 ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது நடிகர் கமல்ஹாசனின் 233 வது திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த திரைப்படம் நடிகர் கமல்ஹாசனின் 234 வது திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் 235 வது திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இந்த திரைப்படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து கமல்ஹாசனின் லைன் அப்பில் உள்ளதாகவும் ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு திரைப்படத்தை கொடுக்க கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன.