Kamal Hasan election campaign : நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், திமுக கூட்டணி கட்சிக்கு ஆதரவாக 11 நாள் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியோடு கூட்டணி அமைத்து களம் கண்டு தோல்வியையே சந்தித்தது. ஆனாலும் பல்வேறு இடங்களில் தனக்கு வாக்கு வங்கி இருப்பதையும் உறுதி செய்தது.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில், கமல்ஹாசன் யாருடன் கூட்டணியில் ஈடுபடப் போகிறார் என்று பேசப்பட்ட நிலையில் அவர் திமுக கூட்டணியில் இடம்பிடித்தார். அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை.
அவருக்கு மாநிலங்களவையில் ஒரு சீட் திமுக தரப்பில் இருந்து வழங்கப்பட உள்ளது Kamal Hasan election campaign.
திராவிடக் கட்சிகளை எதிர்த்து கட்சி தொடங்கியவர், திமுகவுடனே கூட்டணி வைத்தது குறித்து கட்சிக்குள்ளேயே சலசலப்பு எழுந்தது.
மக்களை பிளவு படுத்த மதவாத சக்திகள் நினைக்கும்போது அதற்கு எதிராக நிற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைப்பாடுதான் தன்னை திமுகவின் பக்கம் அணி சேரச் செய்தது.
![Kamal Hasan election campaign](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-02-29-at-1.10.17-PM-10.jpeg?resize=800%2C401&ssl=1)
அந்த அணியை பலப்படுத்த வேண்டும் என்னும் நோக்கம் காரணமாகவே, சீட் எதுவும் கேட்டு நெருக்கடி கொடுக்கவில்லை என்றெல்லாம் கமல்ஹாசன் செய்தித்தாள் ஒன்றில் தன்னிலை விளக்கம் போல பேட்டியும் தட்டியிருந்தார்.
இந்த நிலையில் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் கமல்ஹாசனை நேரில் சந்தித்து, தங்களுக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, தான் சார்ந்திருக்கும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக மக்கள் நீதிமய்யத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 நாட்கள் அவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றுபிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
அவர் சுற்றுப்பயண விவரம் வருமாறு:-
- 29.03.2024 – ஈரோடு
- 30.02.2024 – சேலம்
- 02.04.2024 – திருச்சி
- 03.04.2024 – சிதம்பரம்
- 06.04.2024 – ஸ்ரீபெரும்புதூர், சென்னை
- 07.04.2024 – சென்னை
- 10.04.2024 – மதுரை
- 11.04.2024 – தூத்துக்குடி
- 14.04.2024 – திருப்பூர்
- 15.04.2024 – கோயம்புத்தூர்
- 16.04.2024 – பொள்ளாச்சி
இதையும் படிங்க : “ஓபிஎஸ் இரட்டை இலையை பயன்படுத்த தடை தொடரும்”