காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த நிலையில்,உலக பிரசித்திப்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் ஆடி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
பொதுவாக காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில்(kanchipuram temple) முக்கிய பிரமுகர்கள் முதல் பொது மக்கள் வரை கிழக்கு கோபுர வாசல் வழியாக தான் கோயிலுக்குள் செல்வது வழக்கம். ஆனால், துர்கா ஸ்டாலின் மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே சென்று பேட்டரி கார் மூலம் காமாட்சி அம்மன் மூலஸ்தானம் அமைந்துள்ள பகுதிக்கு வந்துள்ளார்.
பின்பு,அங்கு நடைபெற்ற ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.காமாட்சி அம்மனையும், வராகி அம்மனையும் தரிசித்தார்.மேலும் கோயில் நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பிரசாதங்களை பெற்றுக் கொண்டார்.
இதனையடுத்து புறப்படும் நேரத்தில் செய்தியாளர்கள் துர்கா ஸ்டாலினை படம்பிடிக்க முயன்ற போது உதவியாளர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் துர்கா ஸ்டாலின் வருகையால் கோவில் வளாகம் முழுவதும் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.