என் அன்புத் தம்பி என்று அம்மா உரிமையோடு கூறியவர் இன்று ஸ்டாலின் நிலையத்தில் இடம் தேடுகிறார் அமைச்சர் சேகர்பாபு குறித்து முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா குற்றம் சாட்டி உள்ளார்.
அதிமுக ஆட்சியில் விதவைப் பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று கூறிவிட்டு திமுக பொதுக் கூட்டத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை கனிமொழி ஏற்படுத்தி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ் மொழிக்காக தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் இன்று அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.
இந்தி திணிப்பு போராட்டங்களில் பங்கேற்று உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வீர வணக்கம் செலுத்துவது வழக்கம்.
சென்னை வடகிழக்கு மாவட்டம் அதிமுக சார்பில் ஆர் கே நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து அமைதி ஊர்வலமாக எண்ணூர் நெடுஞ்சாலையில் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்காக ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் வினோபா நகரில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மலர்வலை வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர்,மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி முழக்கமிட்டனர் பின்னர் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.
முன்னதாக மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ஆர்கே நகர் தொகுதியில் தான் அம்மாவைப் பற்றி பேசுவதற்கு சரியாக இருக்கும் அவர்தான் தொகுதியை தேர்ந்தெடுத்து இந்த மக்கள் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல மிகவும் வழிவகை செய்தார்.
மேலும் அரசு கல்லூரிகள் பள்ளிகள் அமைத்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து பல்வேறு நன்மைகளை செய்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்றும் அவர்கள் வழியில் மீண்டும் நம்முடைய எடப்பாடியார் பொதுச் செயலாளராக பதவியேற்பார் என்றும், திமுக கட்சியாக இருந்தபோது பிரச்சார மேடைகளிலும் பேசிய உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு தமிழகத்தில் வராமல் இருக்க எங்களிடம் சூட்சமம் இருக்கிறது.
அதனை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என கூறிவிட்டு அவர் அமைச்சர் ஆவதிலேயே குறியாக இருந்து விட்டு அமைச்சர் ஆகி விட்டார் ஆனால் நீட் தேர்வை பற்றி தற்போது எதுவும் பேசப்படுவதில்லை அவர்களின் குடும்பம் நடத்தும் பள்ளியின் பெயர் மட்டும் சன் சைன் எனவும் நிறுவனத்தின் பெயர் ரெட் ஜெயின்ஸ் என்று வைத்துள்ளனர் அதெல்லாம் எப்போது தமிழில் மாற்ற உள்ளனர்
தற்போது பகுதியைச் சேர்ந்த அமைச்சராக இருக்கக்கூடிய சேகர் பாபு அவர்கள் அவர்கள் திமுக குடும்பத்திற்கு செருப்பு தூக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார் அம்மா உங்களுக்கு கொடுக்காத வாழ்க்கையா வசதியா அங்கீகாரமா?
கடந்த 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தங்களை என்கவுண்டரில் போட நினைத்தபோது ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் என் தம்பி சேகர் பாபு என மருத்துவமனைக்கு சென்று பார்த்து வந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனவும்,
ஆனால் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய அவர்களின் இதயத்தில் இடம் தேடிக் கொண்டிருக்கிறார் என குற்றம் சாட்டினார் அதிமுக ஆட்சியில் விதவைப் பெண்கள் தான் அதிகமாக உள்ளார்கள் என திமுக பிரச்சார கூட்டங்களில் பேசிய கனிமொழி தற்போது விருகம்பாக்கம் பொதுக்கூட்டத்தில் அவர் பேசக்கூடிய மேடையிலேயே பெண் காவலர்களிடம் மிக மோசமாக நடந்து கொண்டிய கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இந்த விவகாரத்தை அடியோடு மறைத்து விட்டார் இது போன்ற சட்டமன்ற பிரச்சனை தான் திமுக ஆட்சியில் நடைபெற்று வருவதாக பேசினார்.