Mandya constituency Kumaraswamy victory :
கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் குமாரசாமி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடக்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (04.06.24) எண்ணப்பட்டு வருகின்றன.
அதன்படி, இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் காங்கிரஸ் 1 தொகுதியிலும், பாஜக 3 தொகுதியிலும், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதியிலும் வெற்றி பெற்று உள்ளது.
இதையும் படிங்க : 7 தொகுதிகளில் 3-வது இடம் பிடித்து மாஸ் காட்டும் NTK! அதிர்ச்சியில் அதிமுக, பாஜக!
மீதமுள்ள தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் மாண்டியா தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட குமாரசாமி 8,51,881 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் (Mandya constituency Kumaraswamy victory).
இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமண கவுடா 5,67,261 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 2,84,620 ஆகும்.