நடைபெற உள்ள கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் (congress) ஆட்சிக்கு வந்தால், அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2000 வழங்கப்படும் என கர்நாடக காங்கிரஸ் அறிவித்து உள்ளது.
வரும் மே 10-ம் தேதி கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் (congress) கட்சி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அந்த அறிவிப்பில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம் தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 2,000 வழங்கப்படும் எனவும், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும், வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம், வேலை இல்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ3,000 நிதி உதவி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், விவசாய கடன் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் போன்ற ஏராளமான வாக்குறுதிகள் அந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.