கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகித்துள்ள நிலையில்,ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே , சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 2615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில்,பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும் ஜனதா தளம் சார்பில் 207 வேட்பாளர்களும் ஆம் ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும், போட்டியிட்டனர்.
ஒட்டுமொத்தமாக 184 பெண்களும் 1 திருநங்கையையும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 5 கோடியே 31லட்சத்து33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.
இதில் 2.67 லட்சம் ஆண்களும், பெண் வாக்காளர்கள் 2.64 லட்சம் பேரும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஐந்தாயிரம் பேரும் வாக்களித்தனர். கடந்த 10ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது 73.19% ஓட்டுக்கள் பதிவாகியிருந்தனர்.
இந்த நிலையில் கர்நாடக சட்டத்தைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.இதில் தற்பொழுது நிலவரப்படி கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
இந்த தேர்தலில் பாஜக அமைச்சர்கள் கடும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். தற்பொழுது நிலவரப்படி பாஜகவைச் சேர்ந்த 8 அமைச்சர்கள் குறைந்த வாக்குகளைப் பெற்று பின்னடைவில் சந்தித்து உள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகா அர்ஜுனா கார்கே , உள்ளிட்டோரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.