தமிழகத்தில் தனித்து அடையாளமாக மாறும் காட்டுப்பள்ளி துறை வகுப்புத் தேர்வு விவாத பொருளாக மாறி உள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்களும் 217 சிறிய துறைமுகங்களும் உள்ளன.மேலும் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி,இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி,தொழில் துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு இந்த துறைமுகங்கள் தான் முதுகெலும்பாக உள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் துறைமுகம் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் பணிகள் தொடங்கப்பட்டது. பின்பு 2013 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து காட்டுப்பள்ளி நிர்வாக துறைமுகம் கடந்த 2018 ஆம் ஆண்டு அதானி குழுமத்தின் அதானி துறைமுகம்,அதானி சிறப்புப் பொருளாதார துறை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.தற்பொழுது இந்த துறைமுகம் 6110 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
மேலும் 34 சூரியமின் திட்டங்களுடன் 320 டன் கையாளக்கூடியதாகவும்,அது மட்டுமில்லாமல் 15000 பேருக்கு வேலைவாய்ப்பு தரக்கூடியதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் திட்டத்தின் மூலம் தென்னிந்தியாவில் முன்னோடி மாநிலமாகக் காட்டுப்பாக்கம் துறைமுகம் திகழும்.இந்த துறை முகத்தில் பெரும்பாலும் நிலக்கரி, ஆட்டோமொபைல் துறை சார்ந்ததாக இருப்பதால் தமிழகத்தில் ஏற்படும் மின்வெட்டு குறைய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.