வட மாநிலங்கங்களை பசு மூத்திரம் மாநிலங்கள் என குறிப்பிட்டு கூறியதற்கு நாடாளுமன்றத்தில் எம்.பி. செந்தில்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் ஜம்முகாஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் திருத்த சட்டம் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.
அப்போது பேசிய தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார்,இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக பலமாக இருப்பதாகவும்,இந்த மாநிலங்களை நங்கள் ‘கோ மூத்திர மாநிலங்கள்’ என்று அழைப்போம் என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இந்நிலையில் திமுக எம்.பி.யின் பேச்சுக்கு அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து, எம்.பி. செந்தில்குமார் பேச்சுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடுமையாக கண்டித்ததாக திமுக அமைப்பு செயலாளர் RS பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதனையடுத்து, தமது பேச்சுக்குதிமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் மன்னிப்பு கேட்டு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட் டுள்ளதாவது:
நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள்அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை,
அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.