கேரள மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் பாதையைக் கடக்க முயன்ற சிறுவன் ஒருவன் அடுத்தடுத்து தொடர்ந்து வரும் பைக் மற்றும் பேருந்தின் நடுவே வேகமாக நுழைகிறான். பைக்கில் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டதால் அதே சமயத்தில் பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்குவதில் இருந்து அவன் நூல் இழையில் தப்பித்தான்.
பின் எழுந்து நின்று செய்வதறியாது கைகால்களை துடைத்தபடி நிற்கிறான். பேருந்தில் சிக்கிய அவனது மிதிவண்டி சுக்கு நூறானது.
அதே நேரத்தில் சிறுவன் சிறு காயங்களோடு உயிர் பிழைத்த இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.