தமிழக கேரள எல்லையில் காதலனுக்கு விஷம் கொடுத்து காதலி கொலை செய்த சம்பவத்தில் அடுத்தடுத்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக கேரள எல்லையான பாறசாலையில் கல்லூரி மாணவன் ஷரொன்ராஜ் என்பவரை அவரின் காதலியான கிர்ஷ்மா கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
க்ரிஷ்மாவை போலீசார் கைது செய்து நெடுமங்காடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அங்கு கழிவறையில் வைத்திருந்த கிருமி நாசினியை குடித்து தற்கொலைக்கு க்ரிஷ்மா முயற்சி செய்துள்ளார்.அங்கிருந்து உடனடியாக மீட்கப்பட்ட க்ரிஷ்மா திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் க்ரிஷ்மாவிடம் இந்த சம்பவம் குறித்து மேலும் தொடர்ந்து விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.அதில் பல அதிர்ச்சியூட்டும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.போலீசில் சிக்காமல் கொலை செய்வது எப்படி என காதலி க்ரிஷ்மாவை கூகுளில் தேடியதாக கூறப்படுகிறது மேலும் மெல்ல உயிர் போகும் படி எந்த விஷயத்தை பயன்படுத்தலாம் என்றும் இணையத்தில் தேடி உள்ளார் காதலி க்ரிஷ்மாவை இது மட்டுமில்லாமல் இந்த வழக்கில் ஒரு வேலை காதலி க்ரிஷ்மாவை சிக்கிக் கொண்டால் எத்தனை வருடம் தண்டனை என்பதையும் முன்பே அலசி ஆராய்ந்து உள்ளார் க்ரிஷ்மா. மேலும் போலீசிடம் ஆஜராகும் முன்பு விசாரணையில் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்று சட்ட ஆலோசனை செய்த பிறகு போலீசில் ஆஜராகி உள்ளார் க்ரிஷ்மா.
இவ்வாறு அடுத்தடுத்து வெளியான பல அதிர்ச்சியூட்டும் தகவல்களால் அதிர்ச்சியான க்ர்ஷ்மா வீட்டின் அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டில் கல் எரிந்து எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.க்ரிஷ்மா வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகி உள்ள பல அதிர்ச்சியூட்டும் தகவல்களின் மூலம் ஷ்ரொன்ராஜை க்ரிஷ்மா தான் திட்டமிட்டு கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.