கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி கேரளா (kerala) மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த 32 வயதாகும் நபர் ஒருவர் தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார்.
வெளியில் சென்ற அவர் ஹெல்மெட் அணியாமல் சென்ற நிலையில், அங்குள்ள டிராபிக் சிக்னலில் இருக்கும் சிசிடிவி கேமராக்களில் அவர் ஹெல்மெட் அணியாமல் சென்றது பதிவாகியுள்ளது (kerala).
இந்நிலையில், மோட்டார் வாகன சட்டத்தின் படி ஹெல்மெட் அணியாமல் சென்றது விதிமீறல் என்பதனால், போக்குவரத்துத் துறை சிசிடிவி புகைப்படங்களை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்து அபராதம் கட்டுமாறு கூறியுள்ளது.
இங்கு தான் பெரிய ட்விஸ்ட்டே நடந்துவிட்டது. ஹெல்மெட் அணியாமல் வெளியில் சென்ற நபரின் வாழ்க்கையில் விதி இப்படி விளையாடும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஏனென்றால், அந்த ஸ்கூட்டியின் ஆர்சி உரிமம் அந்த நபரின் மனைவியின் பேரில் உள்ளது.
எனவே, சிசிடிவி புகைப்படங்கள் வீட்டில் உள்ள அவரது மனைவியின் செல்போனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் தனது கணவர் வேறு ஒரு பெண்னுடன் வெளியே சுற்றியுள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதையடுத்து, தனது கணவரிடம் போக்குவரத்துத்துறை அனுப்பிய புகைப்படத்தை காட்டி யார் அந்த பெண் எனக் கேட்டுள்ளார். அதற்கு கணவர், நான் அந்த பெண்ணுக்கு லிப்ட் தான் கொடுத்தேன் அந்த பெண் யார் எனத் தெரியாது எனக் கூறி சமாளித்துள்ளார்.
இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியுள்ளது. இதில், தன்னையும் தனது 3 வயது குழந்தையையும் கணவர் தாக்கியதாகக் கூறி மனைவி காவல்துறையிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை அந்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்ற காவலில் அவர் சிறைவைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஹெல்மெட் போடாமல் பைக்கில் சென்று சிசிடிவி கேமராவில் மட்டும் இல்லாமல் தனது மனைவியிடமும் சேர்த்து மாட்டிக்கொண்ட கணவர் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.