த்ரிஷா மன்சூர் அலிகான் விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான்,லியோ திரைப்படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சிகள் எனக்கு கொடுக்கப்படவில்லை அருவுருக்கத்தக்க சர்சைக் கருத்தை தெரிவித்திருந்தார் .மன்சூர் அலிகான் பேசிய பேச்சு காட்டுத்தீ போல் பரவிய நிலையில் திரை பிரபலங்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில்,பாஜக நிர்வாகியும்,தேசிய மகளிர் ஆண்னைய உறுப்பினருமான குஷ்பூ கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இது மாதிரியான மனிதர்கள்.. தங்களின் தவறுகளை மறைக்க பிறர் தவறான செயல்களுக்கு உதாரணம் காட்டி தங்கள் செயல்களை நியாயப்படுத்த முயல்கின்றனர்.
மன்சூர் அலிகான் பிறரை நோக்கி விரல் நீட்டுவதை விட, உன்னையே பார். உங்கள் ஆணவமும் எதிர்க்கும் மனப்பான்மையும் நீங்கள் எவ்வளவு பெண் வெறுப்பு மற்றும் அகங்கார நபர் என்பதைக் காட்டுகிறது. இதிலிருந்து விடுபடலாம் என்று நினைத்தால், மன்னிக்கவும் முடியாது.
மன்னிப்பு உங்கள் ஆண்மையின் அடையாளத்தை பறிக்காது. இது உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு கௌரவத்தைக் கொடுக்கும். ஒருவேளை நீங்கள் உங்கள் திரை கதாபாத்திரத்தை வெகுதூரம் மற்றும் தனிப்பட்ட முறையில் எடுத்துச் சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆண்னையம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்து இருந்தார்.
குஷ்பூவை டேக் செய்த திமுக நிர்வாகி:
இந்த நிலையில், இதனை டேக் செய்து திமுக நிர்வாகி ஒருவர் ,மணிப்பூரில் பெண்கள் அம்மணமாக்கி அடிக்கப்பட்டபோது தூங்கி கொண்டிருந்த குஷ்பூ மகளிர் ஆணையம் திரிசாவுக்காக எழுந்து வந்திருக்கிறது.இதை வச்சாவது தாமரைக்கு ரெண்டு ஓட்டு தேறுமா ங்கிற நப்பாசையில் மற்றபடி மகளிர் நலனெல்லாம் அந்த கட்சியில மயிரு நலன் தடவுவதற்கே கூட்டம் போடுற சங்கிகள் என்று கட்டமாக பதிவிட்டு இருந்தார்.
இதற்க்கு பதிலடி கொடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட குஷ்பூ,
இது போன்று தான் திமுகவினருக்கு கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்க. மன்னிக்கவும், உங்கள் செரி மொழியைப் பேச முடியாது, ஆனால் நான் விழித்தெழுந்து என்ன பேசினார், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைப் பார்க்க பரிந்துரைக்கிறேன். மேலும் திமுக உங்களுக்கு சட்டங்களை கற்பிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது, உங்களைப் போன்ற முட்டாள்கள் அவரைச் சுற்றி இருப்பதற்காக உங்கள் தலைவருக்கு அவமானம்.முதலமைச்சர் முக ஸ்டாலின்
உங்களை அழிக்க வெளியில் இருக்கும் முட்டாள்கள் கூட்டம் இருக்கிறது ஜாக்கிரதை என்று பதிவிட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.