எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ் நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் (kilambakakam) பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னையின் புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை, கடந்த டிசம்பர் 30ம் தேதி முதல்வர் மு.கஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படுகிறது.
முன்னதாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என ஜனவரி 24-ம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்த்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோயம்பேட்டில் தனியார் பேருந்துகள் டெப்போக்களில் நிறுத்தி வைக்க அனுமதிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் தெரிவித்தார்.
https://x.com/ITamilTVNews/status/1753363235380863305?s=20
கிளாம்பாக்கத்தில் (kilambakakam) தூரத்தை தவிர வேறு எந்த அசவுகரியமும் இல்லை என்றும் அவர் விளக்கினார்.
இந்த பிரச்னையில் சுமூக தீர்வு காண வரும் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் பி.எஸ்.ராமன் தெரிவித்தார்.
இதனையடுத்து, இரு தரப்பு இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க : TVK: திராவிடம் என்று இல்லாததே மாறுதல் தான் -விஜய்க்கு சீமான் வாழ்த்து
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதற்கு தமிழக அரசை பாராட்ட வேண்டும் என கூறிய நீதிபதி, எந்த திட்டம் வந்தாலும் அதில் குறை இருப்பது தவிர்க்க முடியாதது எனவும் குறிப்பிட்டார்.