பிரபல புரோட்டா கடை குடோனுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி அதிகாரிகள் செய்த சோதனையில் 200 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டார் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள பார்டர் ரஹ்மத் பரோட்டா கடை உள்ளது. இந்த கடையில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுந்ததையொட்டி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இந்த தகவலை அறிந்த கடை ஊழியர்கள் அனைவரும் உடனடியாக கடையைப் பூட்டிக்கொண்டு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த கடைக்கு. சீல் வைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் திடீர் என சீல் வைக்கப்பட்ட கடைக்கு அதிகாரிகள் சீலை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த கடையினுள் உள்ள குடோனில் நான்கு மூட்டைகளுக்கு மேலாக மிளகாய் வத்தல் இருந்துள்ளது.
அவை அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையிலிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கெட்டுப்போன மிளகாய் வத்தலை அளிக்க உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் அந்த ஓட்டலில் உள்பகுதியில் தயாரிக்கப்பட்ட மிளகாய் வத்தல் அரவைக் கரைசலைக் இருப்பதை கண்ட அதிகாரிகள் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர் .
அப்பொழுது கடை ஊழியர்கள் முன்னுக்கு முரணாக பதில் அளித்ததை கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர் . மேலும் 2 கிலோவுக்கு மேலாக அழுகிய கெட்டுப்போன சிக்கன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தன. இதனை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டன.
பிரபல புரோட்டா கடையில் 200 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டார் சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.