பொதுவாக இறால் வாங்கினால் அதனை குழம்பாகவோ அல்லது தொக்காகவோ சமைப்பதுதான் வழக்கம். அதனை கொஞ்சம் மாற்றி கொரியன் ஸ்டைல் “PRAWN PAN CAKE” செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..
கொரியன் ஸ்டைல் PRAWN PAN CAKE செய்ய தேவையான பொருட்கள்..
- 15 பெரிய சைஸ் இறால்
- மைதா
- உப்பு
- மிளகுத்தூள்
- முட்டை
- தண்ணீர்
- வெங்காயத்தாள்
- சமையல் எண்ணெய்
- லைட் சோயாசாஸ்
- வினிகர்
- சர்க்கரை
- நல்லெண்ணெய்
- எள்
- கொரியன் சில்லி பேஸ்ட்..
செய்முறை…
முதலில் தயாராக வைத்திருக்கும் வெங்காயத் தாளை எடுத்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர், ஒரு பாத்திரத்தில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
மேலும், ஏற்கனவே தயாராக எடுத்து வைத்துள்ள மைதா மாவில் முட்டை கலவையை சேர்த்து, தேவையான அளவிற்கு உப்பும் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். அந்த மாவில் நறுக்கி வைத்த வெங்காயத் தாளையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது, பேன்கேக்கின் கதாநாயகனாக தோல் உரித்து வைத்துள்ள இறாலை எடுத்து மெல்லிதாக இரண்டு துண்டுகளாக நறுக்கி அதன் மீது சிறிது உப்பும் தூவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், அடுப்பில் ஒரு பேன் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில், ஏற்கெனவே கலந்து வைத்துள்ள மாவை தோசை போன்று ஊற்றிக்கொள்ள வேண்டும்.
பின்னர், அதன் மீது நறுக்கி உப்பு தூவி வைத்துள்ள பிராவ்ன் துண்டுகளை அதன் மீது ஒவ்வொன்றாக வைக்க வேண்டும். பின்னர், அதனை நன்கு வேகும் வரை இருபுறமும் திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும்.
அவ்வளவுதான், சூடான சுவையான கொரியன் ஸ்டைல் பிராவ்ன் பேன் கேக் ரெடி.. இதனை நீங்களும் சண்டே ஸ்பெசலாக வீட்டில் சமைத்து குடும்பதினருடன் சேர்ந்து சாப்பிட்டு மகிழுங்கள்..