இன்றைய தினம் நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. மகா விஷ்ணுவின் அவதாரங்களில் விஷ்ணு 8வது அவதாரமாக அவதரித்த நாளை தான் நாம் கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுகிறோம்.
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி தினம் கோகுலாஷ்டமி. கண்ணனின் அவதார நட்சத்திரம் ரோகிணி. ஆவணி ரோகிணியும் அஷ்டமி திதியும் இணைந்த நாளில் கிருஷ்ணன் அவதாரம் செய்தார். அந்த வகையில் இந்த ஆண்டு இன்றைய தினம் கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் இரவு அஷ்டமியும் ரோகிணியும் சேர்ந்து வருவதால் இன்று இரவு 10 மணிக்கு மேல் கோகுலாஷ்டமி கொண்டாடுவது சிறப்பு.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று அனைத்து கிருஷ்ண கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்யப்படும். அந்த வகையில், இந்த நாளில் தமிழகத்தில் கண்டிப்பாக நாம் தரிசிக்க வேண்டிய கிருஷ்ணரின் கோயில்களை பார்க்கலாம்.
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
திருச்சியில் திருவானைக்காவல் என்ற இடத்தில் அமைந்துள்ள கோகுலகிருஷ்ண கோவிலில் புல்லாங்குழலுடன் கிருஷ்ணர் கோவிலின் கருவறையில் இருந்து காட்சி தருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் மன்னர் குடியில் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. மிகவும் புகழ்பெற்ற கிருஷ்ண கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இந்தக் கோவிலில் இருக்கும் திருமால் ஸ்ரீவித்யா ராஜகோபாலனாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
திருவள்ளுவர் மாவட்டம் வேப்பங்கொண்டபாளையம் என்ற இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் குழந்தை வரம் தருவதற்கு மிகவும் புகழ்பெற்ற கோவிலாகும்.
ஈரோடு மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள நவநீத கிருஷ்ண கோவில் மிகவும் பழமையான கிருஷ்ணரின் கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் கிருஷ்ணர் சத்தியபாமா மற்றும் ருக்மணியுடன் காட்சி தருகிறார். இக்கோவிலானது குருவாயூர் கோயிலுக்கு நிகரான புகழ்பெற்றது.
நாகர்கோவில் வடசேரி என்ற இடத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவில் ஆதி வர்மனால் கட்டப்பட்டது. இந்த கோவிலில் கிருஷ்ணர் குழந்தை வடிவில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.