தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக திராவிட தலைவராக மட்டுமில்லாமல் மூலதல்வராக நடந்துகொண்டார் அவருக்கு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.44 வைத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் மாமல்லவுரத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த போட்டிகள் அணைத்தும் நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழகத்தில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பறைசாற்றும் வகையில் மிக பிரமாண்டமான கண்கவர் காலை நிகழ்ச்சிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். முன்னதாக பா.ஜ.க மைய குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் எல்.முருகன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்தனர்.சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “செஸ் போட்டிக்காக பிரதமரின் பங்கு என்ன என்று கோடிட்டு முதல்வர் பேசினார். 5000 ஆண்டு பாரம்பரிய வரலாற்றை காண்பித்தது தமிழனாக பெருமைப்பட்டேன். எனவே முதல்வரை பாராட்டியே ஆகவேண்டும்.
மேலும் பாஸ்போர்ட் விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது செயப்பட்டுள்ளனர்.இதெல்லாம் தமிழகத்தில் கேள்விப்பட்டதே இல்லை இந்த விஷயத்தில் சரியான விசாரணை நடந்தால் நிச்சயம் பல விவரம் வெளியே வரவும் எனவும் கூறினார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆகா வேண்டும் என்றும் மின்சாரத்துறையில் நடைபெற்று வரும் ஊழல் குறித்து பாஜக மக்களுக்கு எடுத்துரையிக்கும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் முதல்வராக நடந்துகொண்டார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்