Lok Sabha Constituency | மக்களவைத் தொகுதியில் நீலகிரி தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவார் என்று எதிர்ப்பாக்கப்பட்ட நிலையில், இது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே நடைபெற உள்ளது .
இந்த நிலையில், ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 3 ஆம் தேதிகளில் 13 மாநிலங்களில் இருந்து தேர்வான 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிவடைய உள்ளது.
அந்த பதவிகளுக்கு வரும் 27 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் தற்பொழுது நடைபெற்று வருகிறது. நாளை (பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி) வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
இதில் காங்கிரஸ் சார்பில் ராஜஸ்தானில் இருந்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்வாக உள்ளார்.
இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கான மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: Headlines : இன்றைய தலைப்புச் செய்திகள்
அதில், மத்தியப்பிரதேசத்தின் 4 இடங்களில் ஒன்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மத்தியப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான எல்.முருகன், மத்திய இணையமைச்சராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மீண்டும் அதே மாநிலத்தில் இருந்தே மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
மக்களவைத் தொகுதியில்(Lok Sabha Constituency) நீலகிரி தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவார் என்று எதிர்ப்பாக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1757635154862882899?s=20
மாநிலங்களவை:
இந்தியாவில் மாநிலங்களவை (Council of States) அல்லது ராஜ்ய சபா (Rajya Sabha) என்பது இந்திய நாடாளுமன்றத்தில் அதிகபட்சம் 250 உறுப்பினர்களைக் கொண்ட மேலவை ஆகும்.
தற்போது ராச்சிய சபையில் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 12 உறுப்பினர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார்.
இந்த 12 பேரைத் தவிர்த்து மற்றவர்கள் இந்திய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் விகிதாச்சார பிரதிநித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும்.