மதுரை லேடி டோக் பெருமாட்டி கல்லூரியில் (Lady Doak College) 1கோடியே 10லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா உடன் உள்ளார்.
தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் மூர்த்தி..
75 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்த கல்லூரியில் பெண்களுக்காக இந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது. 75 ஆண்டுகளுக்கு முன்பே பெண் கல்விக்கு இந்த கல்லூரி முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

முற்போக்கு சிந்தனை உடன் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. விளையாட்டுக்கு தனக்கென இடத்தை தக்க வைத்துள்ளதாகவும், எனக்கும் இந்த கல்லூரிக்கும் தொடக்கமே ஒரு போராட்டத்தில் தான்.
ஆரம்பத்தில் ஒரு சீட்டு கேட்டேன் நிர்வாகம் கொடுக்க மறுத்துள்ளது. தற்போது 50க்கும் மேற்பட்ட ஏழை எளிய குழந்தைகள் படிக்கும் வகையில் என்னுடைய பரிந்துரை கடிதங்கள் கொடுக்கப்படுகிறது.
பொதுவாகவே, நான் படிப்புக்கு மருத்துவத்திற்கு மட்டுமே பரிந்துரை கடிதம் கொடுப்பேன். ஒரு மனிதனின் கடைசி நிலைக்கு இந்த கடிதம் உதவும் என்பதற்காக. மேலும், முதல்வர் பேசிய போது, நானும் ஆங்கிலத்தில் பேச கற்றுக் கொண்டிருக்கலாமோ என்று கவலைப்பட வைத்து விட்டார்கள் என்றார்.